ஆணை எண் 227
227 என்ற எண்ணை எந்த ஒரு ரஷ்ய மக்களும் மறக்க மாட்டார்கள்







அவர்களுடைய முன்னோர்கள் மற்றும் அவர்களின் கவுரவம் தியாகம் செயற்கரிய செயல் மற்றும் பிழையின் சின்னமாக அது விளங்குகிறது
தோரொயமாக 20 லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட ஸ்டாலின் கிராடில். இன்றும் அது அரியாசனத்தின் கல்லரை தோட்டம் என்று அழைக்கப்படுகிறது .
ஸ்டாலின் தன்னுடைய ராணுவ படைக்கு கொடுத்த பிரபலமான ஆணை 227 என்பது "Never one step back" இது செய் அல்லது செத்து மடி என்பதாம்.
இது பின் வாங்குதல் பதுங்குதல் எதிரியின் பலம் அறிந்து தற்காத்து கொள்ளல் என்பதை மாற்றி ஸ்டாலின்கிராடு நகரத்தை விட்டு ஒரு அடி கூட ரஷ்ய படை பின்வாங்க கூடாது என்றும், பின்வாங்கும் வீரர்களை தன் தேச வீரர்களே சுட்டு கொள்ள வேண்டும் என்ற கடுமையான உத்தரவை வழங்கியது.
மேலும் ராணுவ வீரர்கள் இணைந்து கூட பொது மக்களும் இந்த போரில் நேரடியாக நாசி படையினரை எதிர்த்து சண்டை இட்டனர். தாய்மார்கள் ஒவ்வொரும் தங்கள் குழந்தைகள் ஒரு கையிலும் துப்பாக்கி மறு கையிலும் சகிதமாய் என சண்டை இட்டனர்
இந்த போர்களத்தை சித்தரிப்பவர்கள் இதை நரகத்தின் பிரதி என்று எழுதுகிறார்கள்
ஒரு சான்றாக, இதில் வெறும் 6 அங்குல ஒரு வீதியை நாசிப் படைகள் தாண்டி முன்னேற வேண்டும் எனில் கூட அதில் உள்ள அனைத்து உயிர்களையும் கொன்றே தான் ஆக வேண்டி இருந்தது.
இதன் நிலையை சரியாக விளக்கி கூற, பாவ்லோ வின் வீடு என்ற வெறும் ஒரே ஒரு கட்டிடத்தை தாண்டி முன்னேற அவர்கள் 58 நாட்கள் ரஷ்ய மக்கள் ராணுவத்துடனும் சண்டை இட்டு கொன்றனர்
இங்கு மக்கள் ஒரு இரவு கூட தூக்கம் இல்லாமல் அவதியும் பசியாலும் கடும் குளிராலும் நோய் யுற்றும் பலரும் சுற்றம் நண்பர் குடும்பம் குழந்தைகளை இழந்தும் சோர்வில் அயர்ந்தும் மரண பயத்திலும் தெருக்களில் வீரத்துடன் சண்டை இட்டனர்.
இந்த போர் நாசி படையின் முன்னேற்றத்தை தடுத்து முதற்கொண்டு நாசிப் படையை பின்னுக்கு தள்ளும் புள்ளியாக மாறியது. எவ்வளவு முயன்றும் அவர்களால ஸ்டாலின்கிராடை வெல்லவோ அந்த நகரத்தை தாண்டி முன்னேறவோ முடியவில்லை. கடும் குளிர் மற்றும் எண்ணெய் பற்றாக்குறைகளால் அவர்கள் இருந்து பின்வாங்க வைத்தது. வெற்றியில் அதிபர் ஸ்டாலின் அகம் மகிழ்தார்!!!
இதை தொடர்ந்து நேச நாட்டு படை நாசி படைகளை தொடர்ந்து பின்வாங்க ஸ்டாலின் கிராடு ஒரு உந்து சக்தியாக அமைந்தது. ரஷ்யாவின் வெற்றிக்கு வித்திட்டது என்பது மிகையல்ல. நிற்க,
இந்த பேரில் நடந்த பெரும் இழப்புகள் மற்றும் நாசத்திற்கான காரணங்கள்:
1)மக்கள் வெளியேற கூடாது என்ற உத்தரவை ஸ்டாலின் வழங்கியது தவறு.
அவர் மக்கள் வெளியேற்றி பதுகாக்க தவறி பல தன் சொந்த அப்பாவி மக்களை கொன்றார். ஆணை எண் 227 என்பது வெற்றி பெறுவது நோக்கம் ஆனாலும் அது வரலாற்றின் பிழை
2)ஹிட்லர் ஸ்டாலின் கிரேடு நகரத்தை நாசிப் படைகள் வெல்ல வேண்டும் என்பதில் மிக தீவிரமாய் இருந்தது காரணம் அந்த நகரத்தின் பெயரில் ரஷ்ய அதிபர் பெயர் இருந்தது அதனால் அதை வெல்வது ஸ்டாலின்க்கு அவமானத்தை தரும் என்று அவர் கருதினார்
அந்த கண்ணீர், அந்த இரத்தம், அந்த பனியில் உறைந்த சப்தங்கள் –
இவையெல்லாம் நம்மை பார்த்து ஒரு நாளும் சொல்லும்
போரில் யாரும் வெல்லமுடியாது.
ஒருவனின் ஜெயம், இன்னொருவனின் கல்லறையின் மீது தான் எழுதப்படுகிறது
ஸ்டாலின்கிராட் ஒரு போர் இல்ல...
அது மனித அறிவின் சோதனை.
வெற்றி கிடைத்திருக்கலாம்… ஆனால் அதில உயிர் இல்லை."
அந்த நகர வாசிகள் உயிரோட இல்லை. ஆனா வரலாற்றோட வாழ்கின்றனர்
பிழைகளின் சான்றாக வாழ்கின்றார்கள்
ஆணை எண் 227 ஆவண பிரதி :
(ரஷ்ய மொழியில்)
Comments
Post a Comment