பாரடே
Historical Professors: Michael Faraday, a Founding Father of Electrical Science மைக்கேல் பாரடே பிறக்கும்போது மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர். முறையாக கல்வியை கற்க முடியாமல் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒரு புத்தக அட்டை இடும் கடையில் சாதாரண வேலைக்காரராக சிறுவயதிலேயே பணிக்கு செல்ல தொடங்குகினார். அவர் அந்த கடைக்கு வரும் புத்தகங்களுக்கு அட்டை இடுவது மட்டுமின்றி அவருக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவற்றை வாசிப்பதை வழக்கமாக கொண்ருந்ததார். அவர் அப்படி படிக்கும் புத்தகங்களில் அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக அறிவியல் சார்ந்த புத்தகங்கள் அமைந்தன. அவர் மேலும் அறிவியல் சார்ந்து கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று விரும்பினார் . இருந்தாலும் அவரால் வறுமை காரணமாக அது முடியாமல் இருந்தது பாரடேவின் வாழ்க்கையை மாற்றிய மிக முக்கியமான நிகழ்வு அவர் ஹச் டேவி என்ற அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவினை கேட்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது தான் . அந்த நேரத்தில் பேராசிரியர் டேவி ராயல் இன்ஸ்டியூட்டின் ஆராய...