ஆணை எண் 227
227 என்ற எண்ணை எந்த ஒரு ரஷ்ய மக்களும் மறக்க மாட்டார்கள் அவர்களுடைய முன்னோர்கள் மற்றும் அவர்களின் கவுரவம் தியாகம் செயற்கரிய செயல் மற்றும் பிழையின் சின்னமாக அது விளங்குகிறது தோரொயமாக 20 லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட ஸ்டாலின் கிராடில். இன்றும் அது அரியாசனத்தின் கல்லரை தோட்டம் என்று அழைக்கப்படுகிறது . ஸ்டாலின் தன்னுடைய ராணுவ படைக்கு கொடுத்த பிரபலமான ஆணை 227 என்பது "Never one step back" இது செய் அல்லது செத்து மடி என்பதாம். இது பின் வாங்குதல் பதுங்குதல் எதிரியின் பலம் அறிந்து தற்காத்து கொள்ளல் என்பதை மாற்றி ஸ்டாலின்கிராடு நகரத்தை விட்டு ஒரு அடி கூட ரஷ்ய படை பின்வாங்க கூடாது என்றும், பின்வாங்கும் வீரர்களை தன் தேச வீரர்களே சுட்டு கொள்ள வேண்டும் என்ற கடுமையான உத்தரவை வழங்கியது. மேலும் ராணுவ வீரர்கள் இணைந்து கூட பொது மக்களும் இந்த போரில் நேரடியாக நாசி படையினரை எதிர்த்து சண்டை இட்டனர். தாய்மார்கள் ஒவ்வொரும் தங்கள் குழந்தைகள் ஒரு கையிலும் துப்பாக்கி மறு கையிலும் சகிதமாய் என சண்டை இட்டனர் இந்த போர்களத்தை சித்தரிப்பவர...